தடகள வீரர்களின் ரகசிய தகவல்களை கசியவிட்ட ரஷிய ஹேக்கர்கள்: வாடா கண்டனம்

இருபத்தைந்து தடகள வீரர்கள் தொடர்புடைய ரகசிய தகவல்களின் மேலும் ஒரு தொகுப்பை ரஷிய ஹேக்கர்கள் கசியவிட்டுள்ளதாக வாடா என்றழைக்கப்படும் உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப்படம்

பொதுவாகத் தடை செய்யப்பட்ட ஆனால் மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்திக்கொள்தற்கு அனுமதிக்கப்பட்ட விதிவிலக்கு பெற்றவர்கள் அடங்கிய தகவல்களும் இதில் கசிந்துள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் உட்பட 8 நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரான்சில் உள்ள தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு பரிசோதனை கூடம்

பிரிட்டிஷ் சைக்கிள் பந்தய வீரர் பிராட்லி விக்கின்ஸ் மற்றும் கிரிஸ் ஃப்ருமீ உட்பட மற்ற எந்த தடகள வீரரும் தவறு செய்ததற்கான முகாந்திரம் இல்லை.

ரஷியாவின் அரசு அதரவு பெற்ற ஊக்க மருந்து திட்டம் விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த இணைய தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருவது சந்தேகத்துக்கிடமின்றி தெரிவதாக வாடா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்