"குற்றவாளிகளை தீர்த்துக்கட்ட அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ உத்தரவிட்டார்"

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ

பிலிப்பைன்ஸை சேர்ந்த கூலிக்காக கொலை செய்யும் தொழிலில் முன்பு ஈடுபட்டு வந்த ஒரு நபர் , தற்போது நாட்டின் அதிபராக இருக்கும் ரெட்ரிகோ டுடெர்டோ, டாவோவின் மேயராக இருந்த போது, தனக்கும் மற்றும் கொலை செய்யும் படையை சேர்ந்த மற்ற உறுப்பினர்களுக்கும் குற்றவாளிகளை கொலை செய்யக்கோரி உத்தரவு பிறப்பித்தாக தெரிவித்துள்ளார்.

சட்டத்துக்கு புறம்பான கொலைகள் பற்றி செனட் விசாரணையின் போது, டுடெர்டோ விசாரணையின்றி கொலை செய்வதற்கான உத்தரவுகளை அவரே பிறப்பித்தார் என எட்கர் மடோபடோ காணொளி மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டாவோவின் மேயராக இருந்தபோதும் சரி, அதிபராக பதவியேற்று கொண்ட பின்னும் சரி குற்றவாளிகளை கொலை செய்ததில் தனக்கு எவ்வித தொடர்புமில்லை என டுடெர்டோ ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளார்.

தன்னால் முடிந்த அனைத்து வழிகளிலும், நாட்டில் போதை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோரை ஒழித்து கட்ட அவர் உறுதியளித்திருந்த நிலையில் அதற்கான பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட்டார்.

அதிபராக ரொட்ரிகோ டுடெர்டோ பதவியேற்ற கொண்டதில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட போதைப் பொருள் பயன்பாட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சட்டத்துக்கு புறம்பாக கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்