ஜிம்பாப்வேயில் அக்டோபரில் அமெரிக்க டாலருக்கு இணையான பாண்ட் நோட்டுகள் அறிமுகம்

ஜிம்பாப்வேயில் ,வரும் அக்டோபர் மாதம், அமெரிக்க டாலருக்கு இணையான பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜிம்பாப்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜிம்பாப்வேயில் டாலர் பணத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை DESMOND KWANDE/AFP/Getty Images
Image caption ஜிம்பாப்வேயில் டாலர் பணத்திற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் 2006 வெளியிடப்பட்ட பணம். (கோப்புப்படம்)

கட்டற்ற பணவீக்கத்தை முடிவுக்கு கொண்டுவர பிற வெளிநாட்டு பணத்துடன் டாலரும் 2009 முதல் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

ஆய்வாளர்கள், பத்திரங்கள் அதன் மதிப்பை கொண்டதாக இல்லாமல் இருக்கும், இந்த மாற்றம் மேலும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏற்கனவே அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் சம்பள பணத்தைக் கொடுக்க போராடிவருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்