பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர்கள் கிழக்கு உக்ரேனுக்கு வருகை

கிழக்கு உக்ரேனில் அரசாங்க படைகள் மற்றும் ரஷிய ஆதரவுடைய போராளிகள் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலாகிக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP PHOTO / LOUISA GOULIAMAKI/AFP/Getty Images
Image caption உக்ரேனில் அரசாங்க படைகள் மற்றும் ரஷிய ஆதரவுடைய போராளிகள் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

சர்வதேச கண்காணிப்பாளர்கள், யுத்தநிறுத்த ஒப்பந்தம் நள்ளிரவில் அமலுக்கு வந்தது முதல் பரவலாக பின்பற்றப்படுவதாக மதிப்பீடு செய்துள்ளனர்.

ஜெர்மனிய வெளியுறவு அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மெயர் பேசுகையில்,தற்போது இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவது தான் சவாலான ஒன்று என்றும் ஆனால் இது ஆரம்ப நாட்கள் தான் என்றும் கூறினார்.

உக்ரைன் அரசு, போராளிகள் அரசின் நிலைகளை ஆறு முறை தாக்கினர், ஆனால் அரச படைகள் பதிலுக்கு அவர்களை சுடவில்லை என்று தெரிவித்துள்ளது.