மியான்மரில் கிராமவாசிகளை கொன்ற ராணுவ படையினருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

படத்தின் காப்புரிமை AFP
Image caption மியான்மர் ராணுவம்

மியான்மரில் நடைபெற்ற மிக அரிய வழக்கு ஒன்றில், ஐந்து கிராமவாசிகளை கொலை செய்த குற்றத்திற்காக படையினர் குழு ஒன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.

நான்கு அதிகாரிகள் உட்பட ஏழு படையினர் இதில் அடங்குவார்கள்.

இவர்களுக்கு கடினமான உழைப்புடன் கூடிய சிறைத்தண்டனை ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம், ஷான் மாகாணத்தில் போராளி குழுவினருக்கு உதவியதாக சந்தேகிக்கப்பட்ட டஜன் கணக்கானோரை ராணுவம் சுற்றி வளைத்த போது இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

பின்னர், கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில், ஐந்து உடல்கள் ஒரு பள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மியான்மர் ராணுவம் கொடூர செயல்களை செய்ததாக ஒப்புக் கொள்வது வழக்கத்துக்கு மாறான நிகழ்வாகும்.

தன் வீரர்கள் ராணுவம் மட்டுமே நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்