தெற்கு சூடானிலிருந்து வெளியேறிய ஒரு மில்லியன் மக்கள்: ஐ.நா சபை

படத்தின் காப்புரிமை AFP
Image caption தெற்கு சூடான் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிபர்

தெற்கு சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த மொத்த எண்ணிக்கையில், கடந்த ஜூலை மாதத்தின் போது புதிதாக துவங்கிய மோதலை தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய 1,85,000க்கும் அதிகமானோரும் அடங்குவார்கள்.

தெற்கு சூடானிற்குள் 1.6மில்லியனுக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

டிசம்பர் 2013 ஆம் துவங்கிய உள்நாட்டு போர், கடந்த ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தான நிலையிலும், இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்