பாகிஸ்தான்: மசூதி ஒன்றில் நிகழ்ந்த தாக்குதல் 23 பேர் பலி

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப்படம்

பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் இருந்த மசூதி ஒன்றில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், டஜன்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

அந்த மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் நடந்து கொண்டிருந்த போது, அந்த குண்டுதாரி அல்லாஹு அக்பர் என்ற கத்திக்கொண்டே தன்னைத்தானே வெடிக்க வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் எல்லையில் உள்ள முஹமந்த் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

குண்டு வெடித்ததன் தாக்கம் காரணமாக, மசூதியின் ஒரு பிரிவு தகர்ந்து தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த பெரும்பாலானவர்கள் மருத்துவமனையில் அபாய கட்டத்தில் உள்ளனர்.

இந்த தாக்குதலை எந்த குழு நிகழ்த்தியது என்பது தற்போது உடனடியாக தெரியவில்லை.

கடந்த காலங்களில் இதே போன்ற தாக்குதல்களை பாகிஸ்தானின் தாலிபன் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்