சிரியாவை அமெரிக்கா வழிநடத்த தவறினால், வான்வழி தாக்குதல் நடக்கும் வாய்ப்பு: ரஷிய அமைச்சர் எச்சரிக்கை

அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சிரியாவில் உள்ள மிதவாத எதிர்தரப்பு படைகள், அல் கொய்தா தொடர்புடைய குழுக்களிடமிருந்து, பிரிந்து நிற்குமாறு வழிநடத்த தவறினால், ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தும் சாத்தியங்கள் உள்ளது என ரஷியாவின் துணை வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை BBC ADLER
Image caption ரஷியாவும் அமெரிக்காவும் வகுத்தளித்த யுத்த நிறுத்த திட்டம் சிரியாவில் இந்த வாரம் முதல் அமலுக்கு வந்தது. சிரியா (கோப்புப்படம்)

ரஷியாவின் துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டனோவ் பிபிசியிடம் பேசுகையில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா வகுத்தளித்த யுத்த நிறுத்த திட்டம் ' என்ற திட்டம்தான் தற்போது உள்ள ஒரே திட்டம். இந்த திட்டம் இந்த வாரம் அமலுக்கு வந்தது என்றார்.

அவர், ரஷியா, இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை செயல்படுத்துவதில் உறுதியுடன் உள்ளது என்றும், சிரியா அரசாங்கம் எந்தவித மீறல்களையும் செய்யாது என்றும் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்