ஊக்க மருந்து பயன்பாடு விவகாரம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீது விமர்சனம்

ரஷிய அரசின் ஆதரவுடன் பல்வேறு விதமான விளையாட்டுகளை விளையாடும் வீரர்கள், ஊக்கமருந்து பயன்படுத்தியதை வெளிகொண்டுவந்த விசாரணை அதிகாரி ஒருவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீது பேராசிரியர் ரிச்சர்ட் மெக்லாரன் கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வளாகம்(கோப்புப்படம்)

பேராசிரியர் ரிச்சர்ட் மெக்லாரன் பி பி சியிடம் பேசுகையில், ரஷியாவில் பரவலாக ஊக்க மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது என்ற உண்மையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி புறக்கணிப்பதாக தோன்றுகிறது என்று தெரிவித்தார்.

பேராசிரியர் மெக்லாரன் பேசுகையில், தனது ஆரம்ப அறிக்கையை அளித்தது முதல் ஒலிம்பிக் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களிடம் இருந்து தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்கிறார்.

அவர் மேலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையை கலைக்க வேண்டும் என்று விரும்புவதாக கூட இருக்கலாம் என்று தான் அஞ்சுவதாக தெரிவித்தார்.

மெக்லாரின் இறுதி அறிக்கை வெளியாக இன்னும் சில மாதங்கள் எடுக்கும்.