விடாமுயற்சி: சக்கர நாற்காலியில் ஜெர்மனி வந்த சிரிய அகதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விடாமுயற்சி: சக்கர நாற்காலியில் ஜெர்மனி வந்த சிரிய அகதி

சிரியாவில் கடுமையான போர் நடைபெற்ற அலெப்போ பிரதேசத்திலிருந்து சக்கர நாற்காலியில் வெளியேறிய மாற்றுத்திறனாளிப் பெண் நுஜீன் முஸ்தஃபா ஜெர்மனியில் புதுவாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

அவர் இப்போது பள்ளிக்குச் செல்கிறார், சரளமாக ஜெர்மன் பேசுகிறார்.

தொலைக்காட்சி தொடர்கள் பார்த்து சுயமாக ஆங்கிலம் கற்றுக்கொண்ட அவருக்கு வயது 16. பெரிய கனவுகளுடன் அவர் ஐரோப்பா வந்துள்ளார்.

இருந்தாலும் தாய்நாட்டின் மீதுள்ள தாபம் குறையவில்லை. சிரியாவில் நிலைமை மேம்பட்டால் தாய்நாடு திரும்பவும் அவர் தயாராக உள்ளார்.

இதுகுறித்த பிபிசியின் சிறப்புக் கானொளி.