ஆயுதப் பாதுகாப்பை ஹிலரி கைவிட முடியுமா? டிரம்ப் கேள்வி

ஆயதப் பாதுகாப்பை கைவிட்டால் என்ன நடக்கிறது என்பதை, அதை செய்து பார்த்தால் ஹிலரிக்கு தெரியும் என தன்னுடைய போட்டியாளரான அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரிக்கு குடியரசு கட்சியின் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் அழைப்புவிடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஹிலரி கிளிண்டனை படுகொலை செய்ய குறிப்புணர்த்தியதாக விமர்சனத்தை டிரம்ப் எதிர்கொண்டு வருகிறார்

மியாமியில் நடைபெற்ற பேரணியில் பேசியபோது, ஆயுதங்களை வைத்து கொள்ளவும், தங்களோடு எடுத்து செல்லவும் என இருக்கின்ற அமெரிக்காவின் இரண்டாவது சட்டத் திருத்தத்தை ஹிலரி ஒழிக்க விரும்புவதாக டிரம்ப் தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த கூற்றுக்கு மறுமொழியாக, டிரம்ப் வன்முறையை தூண்டுவதற்கு ஒரு மாதிரியான முறையை கொண்டிருப்பதாக ஹிலரியின் பரப்புரை மேலாளர் ரோபி முக் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆயதப் பாதுகாப்பை கைவிட்டால் என்ன நடக்கிறது என்பதை, அதை செய்து பார்த்தால் ஹிலரிக்கு தெரியும் என டிரம்ப் சவால்

இத்தகைய கூற்றுக்கள் ஏற்றுகொள்ள முடியாதவை. குடியரசு கட்சியின் தலைவர்களால் இது கண்டிக்கப்பட வேண்டும் என்று முக் கூறியிருக்கிறார்.

ஜனநாயக செனட் அவை உறுப்பினர் ஒருவர், படுகொலை அச்சுறுத்தல் அதிகரித்து வருவதை பற்றி கூறியதற்கு மறுமொழியாக, துப்பாக்கி வைத்திருக்கும் அரசியல் சாசன உரிமையை ஹிலரி ஒழிக்க இருப்பதை தடுக்க வேண்டுமென துப்பாக்கி உரிமையாளர்களிடம் கடந்த மாதம் டிரம்ப் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்