தைவானை நெருங்கும் 180 கிமீ வேகத்தில் காற்று வீசும் அடுத்த புயல்

தைவானின் கிழக்கு கடற்கரையில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது புயல் நெருங்கியுள்ளதால் அதிக புயல் காலநிலையை சந்திப்பதற்கு தைவான் தயாராகி வருகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மெரன்டி புயலின்போது உணவு பொட்டலங்கள் விநியோகம் (கோப்புப்படம்)

சனிக்கிழமை இரவு எதிர்பார்க்கப்படும் மலாக்காஸ் புயல், மூன்று சூறாவளிகளின் உக்கிரத்தோடு, மணிக்கு 180 கிமீ வேகமாக வீசும் காற்றோடு, 7 முதல் 11 மீட்டர் உயர அலைகளை எழச் செய்யும் வலிமையுடன் இருக்கும் என கூறப்படுகிறது.

சீனாவின் தென் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பும் வேகமாக வீசும் காற்றும் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மெரன்டி புயல் பாதிப்பு (கோப்புப்படம்)

சீன கடற்படை அதிகாரிகள் அவசரகால நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஜப்பானை நோக்கி செல்கின்ற இந்த சூறாவளி, கடும் மழைப் பொழிவை ஏற்படுத்தக்கூடும்.

வியாழக்கிழமை தைவானையும், சீனாவின் தென் கிழக்கு பகுதியையும் தாக்கி 12 பேர் பலியான மெரன்டி புயல் போன்ற வேகத்துடன் மலாக்காஸ் புயல் இருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்