ரயில் ஓட்டுநரின் `அவசர' குழப்பத்தால் அவமானப்பட்ட ஜப்பான் நிறுவனம்

ரயிலை சரியான நேரத்தில் ஓட்டிச் செல்வதை உறுதி செய்யும் வகையில் மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்த ஓட்டுநரின் செயல்களுக்காக ஜப்பானிய ரயில் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP/GETTY

ரயில் தாமதமாக செல்வது பற்றி மிகவும் கவலைப்பட்ட அந்த ஓட்டுநர் கழிவறை செல்லுவதற்கு கூட நேரமில்லை என நினைத்தார்.

கழிவறைக்கு செல்வதற்கு பதிலாக ஓட்டுநர் அறையின் கதவை திறந்த அவர் தண்டவாளத்தின் மீது சிறுநீர் கழித்தார்.

டோக்கியோ புறநகர் பகுதியில் ரயில் நிலையத்தில் காத்திருந்த பல பயணிகள் அந்தக் காட்சியைக் கண்டார்கள். அதைத் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.

இந்த மாதத்தில் முன்னதாக, டேஷ்போர்டு எனப்படும் ஓட்டுநருக்கு முன்னர் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் பகுதிக்கு மேல் காலை வைத்து கொண்டு ஒரு ஓட்டுநர் ரயில் ஓட்டுகின்ற புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர், புல்லட் ரயில் எனப்படும் அதிவேக ரயிலை ஓட்டுகின்ற நிறுவனமானது மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்