முழு அளவிலான ராணுவத் தாக்குதலை பிரிட்டன் தாக்குப் பிடிக்க முடியாது: மூத்த தளபதி எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பிரிட்டன் மீது ஒரு முழு அளவிலான ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டால் அந்நாட்டில் உள்ள ஆயுதம் ஏந்திய படையினரால் பிரிட்டனை காப்பாற்ற முடியாது என மூத்த பிரிட்டிஷ் ராணுவ தளபதி ஒருவர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், கூட்டுப்படைகளின் தலைமை பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்குமுன் சர் ரிச்சர்ட் பரோன்ஸ், பிரிட்டிஷ் ஆயுத படையினர் குறித்த கடும் மதிப்பீடுகளை குறிப்பாணை மூலம் கூறியிருந்தார்.

பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் முக்கிய திறன்கள் ராணுவத்தில் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சர் ரிச்சர்ட் உட்பட பாதுகாப்புப் படைத் தளபதிகள் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்