ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லூனி வெளியிட்ட அறிக்கைக்கு தெற்கு சூடான் எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தெற்கு சூடானின் உயர் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அமெரிக்க நிறுவனம் ஒன்று சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை அமைதி நடைமுறைகளை சீர்குலைக்கும் என தெற்கு சூடான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் அதிபர் சல்வா கீர் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், எந்த மேற்கத்திய தலைவராவது இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளவார்களா என்று அதிபரின் பேச்சாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெற்கு சூடானில் ஆட்சிமாற்றம் நடைபெற மேற்கத்திய நாடுகள் வேலை பார்த்து வருவதாக அதிபர் சல்வா கீர் தரப்பு அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லூனி

ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லூனி இணை நிறுவனராக இருக்கும் தி சென்ட்ரி என்ற நிறுவனம், தெற்கு சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு போரால் அந்நாட்டு தலைவர்கள் அதிக லாபம் ஈட்டி வந்ததாகவும், அதே சமயம் சாதாரண பொதுமக்கள் இந்த சீரழிவில் பாதிக்கப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டது.

தொடர்புடைய தலைப்புகள்