அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஐரோப்பா ஒன்றியம் மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் முன்மொழியப்பட்ட அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து ஜெர்மனியில் உள்ள நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தமானது உணவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான ஐரோப்பிய தரத்தை குறைத்துவிடும் என்று உலகமயமாக்கல் எதிர்ப்பு குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தம் காரணமாக, அவுட் சோர்ஸ் எனப்படும் பணிகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது அதிகரித்து, உள்ளூரில் பலர் வேலை இழப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

தலைநகர் பெர்லின் உட்பட ஏழு நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாகவும், கட்டணத்தை குறைக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என இதன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜனவரி மாதத்தில், தனது பதவிக் காலம் முடிவடையும் முன்னதாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிட ஒபாமா விழைகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்