வியட்நாம்: அரசு எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிக்கு சர்வதேச பிடியாணை

படத்தின் காப்புரிமை Getty Images

வியட்நாம் அரசாங்கத்தின் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் மூத்த செயல் அதிகாரி, வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில், அவருக்கு அந்நாட்டு அரசு சர்வதேச பிடியாணை ஒன்றை வழங்கி உள்ளது.

மருத்துவ சிகிச்சைகள் பெற வேண்டி கடந்த மாதம் நாட்டைவிட்டு வெளியேறிய டிரின் ஷுவன் இதுவரை நாடு திரும்பவில்லை.

பெட்ரோவியட்நாம் நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு பொறுப்பு வகித்த போது, சுமார் 150 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர், அரசு உரிமம் பெற்ற பதிவெண்ணில் அதிக விலை மதிப்புள்ள லெக்ஸஸ் காரை ஓட்டி சென்ற போது அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து வியட்நாம் மக்களிடையே பெரும் கோபம் ஏற்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்