தவறான எச்சரிக்கையை தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்ட பிரெஞ்சு போலிசார்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பாரிஸின் மத்திய பகுதியில் தவறுதலாக பரப்பப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து பிரெஞ்சு போலிசார் மிகப் பெரிய பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

பாரிஸின் மத்திய பகுதியில் இருந்த தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் மற்றும் ஒருவர் பிணைக்கதியாக கொண்டுசெல்லப்பட்டதாகவும் வெளியான செய்தியை தொடர்ந்து மக்கள் பரபரப்பான வணிக நகரத்தில் இருந்து விலகி இருக்க எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

அதிகாரிகள் நடவடிக்கை தற்போது முடிந்துவிட்டது என்றும், ஆபத்து எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்