நைஜீரிய ராணுவத்தால் போகோஹரம் குழுவினர் 38 பேர் கொலை

நைஜீரிய ராணுவ வீரர்கள், தென்கிழக்கு நைஜர் பகுதியில் போகோஹரம் இஸ்லாமியவாத குழுவை சேர்ந்த 38 பேரை கொன்றனர் என்று நைஜீரிய ராணுவ தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நைஜரிய ராணு வீரர்கள் போகோஹரம் குழுவினரிடம் இருந்த ஆயுதங்களும், வெடிபொருட்கள் கைப்பற்றினர். நைஜரிய ராணு வீரர்கள் (கோப்புப்படம்)

இந்த நடவடிக்கையின் போது பெரிய அளவில் ஆயுதங்களும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

போகோஹரம் நைஜர் எல்லையில் நிறுவப்பட்டது ஆனால் அண்டை நாடுகளிலும் இயங்கி வருகிறது.

இந்த குழுவின் ஏழு ஆண்டு கிளர்ச்சியால், இரண்டரை மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

போகோஹரமுக்கு எதிரான சண்டையை ஒரு பன்னாட்டுப் படை வழிநடத்தி வருகிறது.