தென்மேற்கு சோமாலிய நகரிலிருந்து பின்வாங்கியது அல் ஷபாப் இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு

வெள்ளியன்று நடந்த கடுமையான சண்டைக்கு பிறகு, அல் ஷபாப் என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு, தென்மேற்கு சோமாலியாவில் இருந்து பின்வாங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை BBC THIRER
Image caption மொகாதிஷு நகரம்

எல் வாக் மீது நடந்த தாக்குதலில், இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர் .

சனிக்கிழமையன்று அல் ஷபாப் நகரத்தை விட்டு வெளியேறிய பிறகு, சோமாலிய தேசிய ராணுவம் அங்கு திரும்பியது.

அந்த குழு, 2011 ல் தலைநகரான மொகதிஷுவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாலும், தற்போதும், நாட்டின் தெற்கு மற்றும் மையப் பகுதிகளில் பெரிய அளவிலான இடங்களை தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது. மற்றும் அந்த குழுவால் பிற இடங்களில் தாக்குதல் நடத்த முடிகிறது.

தொடர்புடைய தலைப்புகள்