மாலியில் ஆயுதக் குழுக்ககுக்கிடையே பல சந்திப்புக்களுக்கு பின்னரும் மோதல், 10 பேர் பலி

போட்டி ஆயுதக் குழுக்களிடையே நடைபெற்றுள்ள மோதலில் 10-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மாலியின் வட பகுதியிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP/GETTY

அரசு ஆதரவு (ஜிஎடிஐஎ) மற்றும் எதிர்ப்பு ஆயுதப்படைகள் (சிஎம்எ) இரண்டும் கிடால் நகரின் வடகிழக்கு பகுதியில் மோதிக் கொண்டதை உறுதி செய்துள்ளன.

போட்டி ஆயுதக்குழுக்களுக்கிடையே நடைபெற்ற பல சந்திப்புகளுக்கு பின்னரும் அந்த பிராந்தியத்தில் மோதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இஸ்லாமிவாத எதிரணிக்கும், அரசுக்கும் இடையே கடந்த ஆண்டு ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும், நாட்டின் பெரும் பகுதி மாலியின் ராணுவத்திடமோ அல்லது வெளிநாட்டு அமைதி காப்பு படைப்பிரிவுகளின் கட்டுப்பாட்டிலோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்