வெனிசுவேலாவை காலனியாக்க முயற்சி - மாதுரோ குற்றச்சாட்டு

தனது நாடும், பிராந்தியமும் உலகத் தாக்குதலை எதிர்கொள்வதாக கூறி, மிகவும் அரிதாக கலந்து கொள்கின்ற அணி சாரா இயக்க நாடுகளின் உச்சி மாநாட்டை வெனிசுவேலா அதிபர் நீகோலாஸ் மாதுரோ துவக்கி வைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வெனிசுவேலா அதிபர் நீகோலாஸ் மாதுரோ

வெனிசுவேலாவின் எதிரிகள் மீண்டும் அதனை காலனியாக்க முயல்வதாகவும், அவர்களது மதிப்பீடுகளை திணிக்க முற்படுவதாகவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க போராடி வருபவரும், எதிர்க்கட்சியினர் பதவியிலிருந்து இறங்க கோரிக்கை விடுக்கப்படுபவருமான மாதுரோ கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வெனிசுவேலாவும், பிராந்தியமும் உலகத் தாக்குதலை எதிர்கொள்கின்றன - வெனிசுவேலா அதிபர் நீகோலாஸ் மாதுரோ

இரான், கியூபா மற்றும் ஜிம்பாப்வே உள்பட 12 நாட்டு தலைவர்கள் கரீபியன் தீவான மார்கரிட்டாவில் நடைபெறும் இந்த அணி சாரா இயக்க நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வெனிசுவேலாவின் எதிரிகள் மீண்டும் அதனை காலனியாக்க முயல்கின்றனர். அவர்களது மதிப்பீடுகளை திணிக்க முற்படுகின்றனர் - வெனிசுவேலா அதிபர் நீகோலாஸ் மாதுரோ

பனிப் போர் காலத்தில் அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியத்தோடு இணைய விரும்பாத நாடுகளால் 1961 ஆம் ஆண்டு இந்த அணி சேரா இயக்கம் நிறுவப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்