சிரியா விமானத் தாக்குதல்: அமெரிக்கா, ரஷியா இடையே கடும் வார்த்தைப்போர்

அமெரிக்க ஆதரவோடு சிரியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தொடர்பாக கடும் வார்த்தைப்போரில்அமெரிக்காவும், ரஷியாவும் இறங்கியுள்ளன

படத்தின் காப்புரிமை AP
Image caption சிரியா படைப்பிரிவுகளுக்கு எதிராக போராடும் தீர் அல்-ஸோவுரிலுள்ள இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள்

இதில் டஜன்கணக்கான சிரியா படையினர் கொல்லப்பட்டும், காயப்பட்டும் இருப்பதாக ரஷியா கூறுகிறது.

பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்த விமானத் தாக்குதல் ஆபத்திற்குள்ளாக்கி இருப்பதாக கூறியிருக்கும் ரஷியாவின் ஐநா தூதர் விட்டாலி சூர்க்கின், ஐநா, பாதுகாப்பு அவையின் அவசரக் கூட்டத்திற்கு உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டுமென தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சிரியா மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் போர்நிறுத்தத்தை மீறிய நடவடிக்கைகள் பற்றிய பல அறிக்கைகள் உள்ளன

இதனை வெளிவேட செயல் என்று விவரித்திருக்கும் அமெரிக்க தூதர் சமான்தா பவர், ரஷியா மிகவும் மலிவான அரசியல் ஆதாயங்களை தேடிக் கொள்ள முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக. இந்த விமானத் தாக்குதல் எதிர்பாராத விதமாக சிரியா படை மீது நடத்தப்பட்டுவிட்டு என்று கூறியிருந்த அமெரிக்கா, அதற்கு மன்னிப்பு கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்