உள்நோக்கம் கொண்ட நியூயார்க் குண்டு தாக்குதல், 29 பேர் காயம்

நியூயார்க் நகரில் மக்கள் நெரிசல் மிகுந்த மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

வெடிக்கும் கருவி ஒன்றால் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இரண்டாவது சந்தேக வெடிபொருளை சற்று தொலைவில் காவல் துறையினர் தேடியும் வருகின்றனர்.

அதை வயர்கள் வெளியே தெரிவதாக இருக்கும் பிரஷர் குக்கரை போன்றதென அமெரிக்க ஊடகங்கள் விவரிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

மான்ஹாட்டன் மாவட்டத்தில் செல்சீ பகுதியில் நிகழ்ந்துள்ள இந்த குண்டுவெடிப்பு, உள்நோக்கம் கொண்ட தாக்குதலாக தெரிகிறது என்று நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இந்த தாக்குதலில் தீவிரவாதக் குழுக்களுக்கோ அல்லது முன்னதாக நியூஜெர்சியில் ராணுவ அறக்கொடை ஓட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு அருகில் நிகழ்ந்த குழாய் குண்டு வெடிப்புக்கோ தொடர்பு இருப்பதற்கான சான்று இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்..

தொடர்புடைய தலைப்புகள்