லிபியா: கிழக்கு பகுதியில் எண்ணெய் துறைமுகங்களை கைப்பற்ற கடும் சண்டை

லிபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள எண்ணெய் துறைமுகங்களை கைப்பற்ற புதிய சண்டை ஒன்று வெடித்துள்ளதாக போட்டி குழுக்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஐ.நாவின் ஆதரவு பெற்ற ஐக்கிய அரசாங்கத்துக்கு விசுவாசமான போராளி குழுவினர், சர்ச்சைக்குரிய தளபதியான கலிஃபா ஹெஃப்தரின் படைகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

லிபியாவின் கிழக்கு நகரமான டொப்ருக்கில் உள்ள போட்டி நிர்வாகத்துக்கு கலிஃபா ஹெஃப்தர் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

கடந்த வாரம் அவருடைய படைகள் பல எண்ணெய் முனையங்களை கைப்பற்றியது.

சமீபத்திய சண்டைகள் எல் சிடெர் மற்றும் ரஸ் லனூஃப் முனையங்களில் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்