காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள்: ராஜ்நாத் சிங்

இந்திய நிர்வாக காஷ்மீரில், ராணுவ தளத்தை தாக்கிய நான்கு பயங்கரவாதிகள் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் எனவும் அவர்கள் பெருமளவு ஆயுதங்களுடன் இருந்தனர் என்றும் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பிரிவினைவாத தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது

இந்த தாக்குதலில் 17 சிப்பாய்கள், துப்பாக்கி மற்றும் கிரனைட் தாக்குதலில் பலியாகியுள்ளதாகவும், மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

முன்னதாக தலைநகர் டெல்லியில் அவசர பாதுகாப்பு கூட்டத்தை கூட்டிய அவர், பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

சமீப வருடங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது; மேலும் இந்திய ஆட்சியாளர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களின் பத்து வாரங்களுக்கு பிறகு இச்சமபவம் நடந்தேறியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்