நுரையீரல் தொற்று காரணமாக முன்னாள் பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் மருத்துவமனையில் அனுமதி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முன்னாள் பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக்

நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் பாரிஸில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

லெ பார்சியன் என்ற பிரெஞ்சு நாளிதழ் ஒன்று, 83 வயதாகும் சிராக், மொராக்கோவின் அகதிரில் உள்ள அரசு மாளிகையில் தனது விடுமுறையை செலவழித்த போது நோயுற்றார் என தெரிவித்துள்ளது.

பிறகு, மொராக்கோ அரசு குடும்பத்தினருக்கு சொந்தமான தனியார் ஜெட் விமானம் மூலம் பிரான்ஸுக்கு மீண்டும் அவர் திரும்பியுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குபின், வழக்கு விசாரணையை சந்தித்த முதல் பிரெஞ்சு அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2011ல் பொது நிதியை மோசடி செய்ததற்காக சிராக்கிற்கு இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

2007ல் பதவியை விட்டு விலகியதிலிருந்து உடல் நலம் சரியில்லாமல் பல காலம் சிராக் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்