ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் புதினின் கட்சிக்கு அமோக வெற்றி

படத்தின் காப்புரிமை EPA
Image caption எந்த பிரச்சனைகளும் இல்லாத தேர்தலை நடத்துவதற்கு ஆட்சியாளர்கள் மிகவும் முனைப்போடு செயல்பட்டனர்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ரஷ்ய கட்சி தீர்க்கமான வெற்றியடைந்திருப்பதன் மூலம் அதிபர் விளாடிமிர் புதின் தன்னுடைய கட்சியின் மீதான அதிகாரத்தை வலுப்படுத்தியுள்ளார்.

புதினுக்கு விசுவாசமான நான்கு கட்சிகளும் இந்தத் தேர்தலில் நல்ல வாக்குகள் பெற்றிருந்தன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption புதின் (வலது) ஐக்கிய ரஷ்ய கட்சியின் செயற்பாட்டாளர்களை பாராட்டினார்

ஆனால் இந்த தேர்தலில் இதுவரை நடந்த வாக்குப்பதிவுகளில் மிகவும் குறைவானோரே வாக்களித்திருந்தனர். மோசடிகள் நடந்ததற்கான அறிக்கைகளும் உள்ளன.

ஸ்திரத்தன்மைக்கான தேர்தல் இது என்று அதிபர் புதின் முன்னதாக கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption 2014 ஆம் ஆண்டு ரஷியா தன்னோடு இணைத்து கொண்ட க்ரைமியாவில் நடைபெற்றுள்ள தேர்தல் யுக்ரைனை கோபமடைய செய்திருக்கிறது

நாடாளுமன்றத்தில் தங்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலர் வாக்களிக்காமல் இருக்க முடிவெடுத்தாக மாஸ்கோவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறுகின்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் நான்காவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுவார்.

தொடர்புடைய தலைப்புகள்