போலிஸ் பிடியில் சிக்கினார் நியுயார்க் தாக்குதல்தாரி அகமது கான் ரஹானி

கடந்த வார இறுதியில், நியுயார்க் மற்றும் நியு ஜெர்ஸியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆஃப்கன் வம்சவாளியை சேர்ந்த 28 வயதான அமெரிக்க பிரஜை ஒருவரை அமெரிக்க போலிசார் தேடி வந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அந்த நபரை போலிசார் காவலில் எடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அகமது கான் ரஹானி

அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலிசார், அவரது பெயர் அகமது கான் ரஹானி என்று தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு மற்றும் பல வெடிக்காத சாதனங்கள் இடையே ஒற்றுமைகள் இருப்பதாக நியுயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ தெரிவித்துள்ளார்.

Image caption அகமது கான் ரஹானி

இந்த சம்பவங்கள் அமெரிக்காவில் பயங்கரவாத செல் ஒன்று இயங்குவதாக இது கோடிகாட்டுவதாக கூறிய அவர், இச்சம்பவத்துடன் வெளிநாட்டு தொடர்புகள் இருந்தால் அது குறித்து தான் ஆச்சரியமடையமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள் குறித்த விசாரணை வேகமாக நடந்து வருவதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்