அகதிகள் நெருக்கடி: பலமான தலைமைத்துவத்திற்கு ஐ.நா ஆணையர் அழைப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஃபிலிப்போ கிராண்டி(கோப்புப் படம்)

ஐரோப்பிய அரசுகள், அகதிகள் தொடர்பான நெருக்கடியை சரிசெய்ய உதவுவதில் பலமான தலைமைத்துவத்தைக் காட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையர்ஃபிலிப்போ கிராண்டி.

அகதிகள் மற்றும் குடியேறிகள் தொடர்பான உச்சி மாநாட்டை ஐ.நா., நடத்திய இன்று , போர் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து வருபவர்களிடம் தனி நாடுகள் பெருந்தன்மையை காட்ட ஒன்று கூடி வர வேண்டும் என பிபிசியிடன் தெரிவித்துள்ளார் ஃபிலிப்போ கிராண்டி.

பெரும் எண்ணிகையில் குடியேறுவதை எதிர்ப்பவர்களின் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், குடியேறிகளுக்கு எதிரான அரசியல்வாதிகளை விமர்சித்துள்ளார் மேலும் அவர்கள் தங்களின் தவறான தகவல்களால் அச்சத்தை தூண்டுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.