பிரெஞ்சு நிறுவனத்திற்கு சட்ட விரோத வரிச் சலுகைகள் வழங்கியதா லக்ஸம்பர்க்?

பிரெஞ்சு மின் பயன்பாட்டு நிறுவனமான எஞ்சிக்கு, லக்ஸம்பர்க் சட்ட விரோத வரிச் சலுகைகள் கொடுத்துள்ளதா என்று கண்டறிய ஐரோப்பிய ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகள்

பிற நிறுவனங்களுக்கு கிடைத்திராத, சட்டவிரோத அரசு உதவி என்று விவரிக்கப்படக்கூடிய, சலுகைகளை எஞ்சி நிறுவனம் பெற்றிருக்கலாம் என்று ஐரோப்பிய ஆணையம் நம்புகிறது.

தொழில்நுட்ப பெரு நிறுவனமான ஆப்பிள் 13 பில்லியன் யூரோக்களை வரி பாக்கி என்ற வகையில் அயர்லாந்து அரசுக்கு செலுத்த வேண்டும் என்று ஆணையம் தீர்ப்பளித்த ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் இந்த விசாரணை தொடங்கியுள்ளது.

அந்த தீர்ப்பு ஐரோப்பிய ஆணையம், அமெரிக்க வர்த்தகங்களை நியாயமற்ற முறையில் இலக்கு வைப்பதாக குற்றச்சாட்டுகளை தூண்டியது.