உதவி வாகனத் தொடரணியின் மீது விமானத் தாக்குதல்: கேள்விக்குறியாகும் சிரியா போர்நிறுத்தம்

படத்தின் காப்புரிமை EPA/SYRIAN RED CRESCENT
Image caption 31 லாரிகள் உதவிகள் வழங்க திங்கள்கிழமை புறப்பட்டன

ஒரு வார கால போர்நிறுத்தத்தை முடித்து விடுவதாக சிரியா படை அறிவித்த சில மணிநேரங்களில், அலெப்போ நகருக்கு அருகில் உதவி பொருட்களை எடுத்து சென்ற வாகனத் தொடரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சிரியாவின் செம்பிறை சங்க ஊழியர்களின் இந்த உதவி வாகனத் தொடரணி மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பாக ஐநா தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Syrian Civil Defence White Helmets/AP
Image caption தாக்குதல் நடந்த இடத்தை சுட்டி காட்டும் சிரியா செயற்பாட்டாளர்

அதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா செயற்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றனர்.

ரஷ்யாவோடு ஏற்படுத்திய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருக்கும் அதிர்ச்சி தரும் தாக்குதல் இது என்று தெரிவித்திருக்கும் அமெரிக்கா, இதன் விளைவாக எதிர்கால ஒத்துழைப்பை மறுஆய்வு செய்யும் என்று கூறியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஒப்பந்தத்தில் ஒப்பு கொள்ளப்பட்டுள்ள பல மனிதநேய உதவிகள் இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ளன

இன்று செவ்வாய்க்கிழமை பின்னதாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிற நாடுகள் சிரியா பற்றி கலந்துரையாட இருக்கின்றன. ஆனால், போர் நிறுத்தத்தை மீட்டெடுக்க முடியுமா என்பது தெளிவாக இல்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்