தானியங்கி வாகன ஒழுங்கு வழிகாட்டு நெறி: அமெரிக்கா வெளியீடு

படத்தின் காப்புரிமை AP
Image caption தானியங்கி வாகனம்

ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வாகனங்கள் விரைவாக அதிகரித்து வருவதால், அதனை ஒழுங்குப்படுத்தும் முயற்சியாக வழிகாட்டும் நெறியை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை DELPHI
Image caption சிங்கப்பூரில் தானியங்கி வாடகை கார் சோதனை செய்யப்பட்டுள்ளது

காரின் பாதுகாப்பு, ஆதரவு அமைப்பு, மற்றும் தரவுகள் பதிவும் பகிர்வும் ஆகியவை தொடர்பாக பதினைந்து அம்ச சரிபார்ப்பு பட்டியலை இந்த வழிகாட்டு நெறி உள்ளடக்குகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரிட்டன் சாலைகளில் தானியங்கி வாகனச் சோதனை ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது

தானாக இயங்கும் வாகனங்கள் அறிவியல் தொழில்நுட்ப கற்பனை என்பதிலிருந்து, நிஜமாகி வளர்ந்து வருவதாக செய்தித்தாள் ஒன்றில் வெளியிட்ட கட்டுரையில் அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய வாகனங்கள் உயிர்களை காப்பாற்றுவதோடு, தற்போது கார் ஓட்டுவதை ஒரு தெரிவாக செய்யாதோரின் வாழ்க்கையையே மாற்றும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தானியங்கி வாகன மாதிரிகள்

மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட விதிகள் இருப்பதால் எழுகின்ற குழப்பங்களை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தீர்க்க உதவும் என்று ஒரு கார் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணி இதனை வரவேற்றிருக்கிறது.

தானாக இயங்க கூடிய கார்களில் பயணிகள் செல்வதை பிட்ஸ்பெர்க்கில் சில வாரங்களில் தொடங்கப் போவதாக உபெர் இணைய வாடகை கார் தயாரிப்பு நிறுவனம் ஆகஸ்ட் மாதம் அறிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்