ஜப்பான்: கடும் பாதிப்பை உருவாக்கியுள்ள மலாகாஸ் சூறாவளி

ஜப்பானில் நாடெங்கும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பலத்த சூறாவளி வீச்சின் காரணமாக, பல ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Kyodo/via REUTERS
Image caption ஜப்பானில் வீசிய பலத்த சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம்

இச்சூறாவளி கடும் மழை மற்றும் வெள்ளத்தினை உருவாக்கியுள்ளது.

மேலும், இந்த இயற்கை சீற்றத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த மலாகாஸ் சூறாவளி, ஜப்பான் தலைநகரான டோக்கியோவின் தென் கிழக்கு திசையை நோக்கி நகர்வதால், அப்பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் மேலும் அதிக வெள்ளம் ஏற்படக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்