ஜோர்டான் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

ஜோர்டான் நாட்டின் புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க அந்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஜோர்டான் நாடாளுமன்ற தேர்தல்

அரசியல் கட்சிகளை வலுப்படுத்துவதற்கென்று வடிவமைக்கப்பட்ட புதிய விதிகளின் கீழ் இந்த வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

ஜோர்டான் நாட்டில் ஜனநாயக சீர்திருத்தங்களை கொண்டு வரும் நோக்கில் ஒரு சிறிய படியாக இந்த வாக்குப்பதிவு பார்க்கப்படும் என்று சமூகவலைத்தளங்களில் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007-ஆம் ஆண்டுக்கு பிறகு, ஜோர்டானின் மிகப் பெரிய எதிர்க்கட்சி அரசியல் குழுவான இஸ்லாமிய சகோதரத்துவம் தற்போதைய தேர்தலில் தான் பங்கேற்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption இஸ்லாமிய சகோதரத்துவ குழு

இதற்கு முன்பு நடந்த இரண்டு தேர்தல்களை இக்குழு புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோர்டான் நாடாளுமன்றத்தில் உள்ள 130 இடங்களில், 27 இடங்கள் பெண்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இன சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்