ஐக்கிய அரபு நாட்டில், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலில் விண்ணப்பித்த பெண்

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில், பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமானதாக ஆக்கிய புதிய சட்டம் ஒன்றின் கீழ் , முதல் விண்ணப்பதாரராக ஒரு பெண், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை KARIM SAHIB/AFP/Getty Images
Image caption ஐக்கிய அரபு நாட்டில், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலில் விண்ணப்பித்தவர் ஒரு பெண் ஆவார்.

உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அந்த பெண்ணின் வழக்கறிஞர், அந்த பெண் எப்போதுமே தனது உண்மையான பாலின அடையாளம் என்பது ஆணாக இருப்பது என்று அவர் உணர்ந்துள்ளார். மேலும், அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக உடல் மற்றும் உளவியல் சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறினார்.

மருத்துவ ஆணையம் அவர் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளது என்றும் அந்த வழக்கறிஞர் கூறினார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நிறைவேறிய ஐக்கிய அரபு நாட்டின் மருத்துவ பொறுப்பு சட்டம், மருத்துவ காரணங்களுக்காக பாலின மாற்று அறுவை சிகிச்சையை செய்துகொள்ள அனுமதிக்கிறது.