நாடுகளிடையே சுவர்கள் வேண்டாம், ஒன்றிணைப்பு தேவை - ஒபாமா

ஐக்கிய நாடுகள் சபையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு வேண்டி அழைப்பு விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Spencer Platt/Getty Images
Image caption உலகநாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு தேவை என அமெரிக்க அதிபர் ஒபாமா ஐ.நா சபையில் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா(கோப்புப்படம்)

உலகம் , ஒருங்கிணைப்பு என்ற மேலும் மேம்பட்ட மாதிரி அல்லது பழையபடி தேசம் மற்றும் மோதல்கள் போன்றவற்றுக்கு பின்வாங்குவது ஆகியவற்றில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது என்றார்.

நியூயார்க்கில், உலக தலைவர்கள் முன் பேசிய ஒபாமா, உலகமயமாக்கலின் நலன்களை சமமாக பகிர்ந்து அமைக்கும் வரை , அடிப்படைவாதம் மற்றும் வெறுப்பு வளர இடம் இருக்கும் என்று எச்சரித்தார்.

உலக நாடுகள், வர்த்தகத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று கூறிய ஒபாமா, தங்களைச் சுற்றி பாதுகாப்பு சுவர்கள் அமைத்த நாடுகள், சிறையில் உள்ளதைப் போல் இருக்கின்றன என்றார்.