அமெரிக்கா: ஊதியம் வழங்குவதில் இனவாதம் அதிகரிப்பா?

அமெரிக்காவில் கடந்த நாற்பது வருடங்களில் கருப்பு மற்றும் வெள்ளை இன பணியாளர்களுக்கிடையே உள்ள ஊதிய வித்தியாசம், குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தொடரும் இனவாதம்

1979 ஆம் ஆண்டிலிருந்து, சராசரி ஊதியம் தேக்க நிலையில் உள்ளது ஆனால் கருப்பின மக்கள் பொருத்தமற்ற அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரும் வேலையில்லாத நிலைமை மற்றும் வலிமை குறைந்த பாரபட்சத்திற்கு எதிரான சட்டங்கள் காரணமாக , கருப்பின மக்கள் சக வெள்ளை இனத்தவரின் ஊதியத்தை காட்டிலும் 22 சதவீதம் குறைவான ஊதியம் பெறுகிறார்கள்.

கருப்பின பெண்களை பொறுத்தவரை இந்த கணக்கு 12 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

2000 ஆண்டிலிருந்து கருப்பின பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் உயர் கல்வி பெறுவதில் உள்ள வித்தியாசமும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்