புருண்டியில் இனப்படுகொலைக்கான ஆபத்து அதிக அளவில் உள்ளது: ஐ.நா., அறிக்கை

புருண்டியில், குறிப்பாக அரசின் முகவர்களால் மிகப்பெரிய அளவில், மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டது என்று நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption புருண்டி வன்முறை

ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கையில் நாட்டின் வரலாற்றை பார்க்கும் போது இனப்படுகொலைக்கான ஆபத்து பெரிய அளவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆசிட்டில் அமர வைப்பது மற்றும் நெருப்பு மூட்டும் கருவிகொண்டு தீயிட்டு கொளுத்துவது உட்பட பலதரப்பட்ட துன்புறுத்தல்களை நிபுணர்கள் பட்டியிலிட்டுள்ளனர்.

இன வெறியூட்டக்கூடிய வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

அதிபர் ப்யார் குறுன்சீசா மூன்றாவது முறையாக போட்டியிட முடிவெடுத்த பிறகு புருண்டியில் கடந்த ஏப்ரல் மாத்த்திலிருந்து வன்முறைகள் வெடித்தன.