அகதிகளை அரவணைக்கும் கேனடா அணுகுமுறை அனைவராலும் இயலுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அகதிகளை அரவணைக்கும் கேனடா அணுகுமுறை அனைவராலும் இயலுமா?

சிரிய உள்நாட்டுப்போரால் ஐம்பது லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர்.

ஐநாவில் இன்று செவ்வாய்க்கிழமை (20-09-2016) நடக்கும் அகதிகளுக்கான ஐநா மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கேனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவும் கலந்துகொள்கிறார்கள்.

முப்பதாயிரம் சிரிய அகதிகளை கேனடா ஏற்றுக்கொண்டுள்ளது.

அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உள்ளூர் குழுக்களின் நிதி உதவியோடு மறுவாழ்வளிக்கப்படுகிறார்கள்.

ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை சமீபகாலத்தில் அதிகரித்திருப்பதைப்போலவே அவர்களுக்கு உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பும் அதிகரித்துவருகிறது.

கேனடாவில் மட்டும் உள்ளூர் மக்கள் குழுக்கள் அமைத்து அகதிகளை வரவேற்கும் போக்கு நிலவுவது ஏன்?

அது குறித்து பிபிசியின் சர்வதேச செய்தியாளர் லிஸ் டோசெட் தரும் நேரடித்தகவல்கள்.