வயதான கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் புது முயற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வயதான கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் புது முயற்சி

பிரிட்டனில் வயதான நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், அவர்களுக்கு உதவும் முயற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கலைஞரான ஆலன் லிட்யார்ட் இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளார்.

அறுபது வயது கடந்தவர்களுக்காகவே ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அவர்களுக்கு வாய்ப்பளிப்பதே அவரது நோக்கம்.

இதில் எண்பது வயதைக் கடந்தவர்களும் இணைந்துள்ளனர். அவரது முதல் படைப்பான 'அனிவர்சரி' விரைவில் அரங்கேறவுள்ளது. இதற்கான தீவிர பயிற்சியில் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் படைப்பு வெற்றிபெற்றால் அது முதிய கலைஞர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது.