ஐ.நா. உதவி வாகனம் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா மீது அமெரிக்கா புகார்

சிரியாவில், திங்கள்கிழமையன்று ஐ.நா. உதவி வாகன தொடரணி மீது நடந்த தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption தாக்குதலுக்குள்ளானபோது உதவி வாகனங்களில் இருந்து பொருட்கள் ஒரு கிடங்கில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஐ.நா. உதவி வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, இரண்டு ரஷ் ஜெட் விமானங்கள் அந்தத் தொடரணிக்கு மேல் பறந்து கொண்டிருந்தன எனறு அமெரிக்க அதிகாரிகள் பி.பி.சி.யிடம் தெரிவித்தனர். இதுபோன்ற துல்லியமான தாக்குதலை நடத்தும் திறன் சிரியா விமானப்படைக்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அலெப்போ நகரில் 23 சிவிலியன்கள் கொல்லப்பட காரணமாக இருந்த அந்தத் தாக்குதலுக்கு தங்கள் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. உதவி வாகன தொடரணி மீது தாக்குதல் நடப்பதற்கு முன்பு, தனது ஆளில்லா விமானங்கள் அதற்கு மேல் பறந்து கொண்டிருந்ததாகவும், அந்தத் தாக்குதலுக்கு சிரியா கிளர்ச்சிக்காரர்கள்தான் காரணம் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

இந்த சர்ச்சை, மீண்டும் சிரியாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்