நியுயார்க், நியுஜெர்ஸியில் குண்டு வைத்ததாக அஹமது கான் மீது வழக்குப் பதிவு

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அஹமது கான்

நியுயார்க் மற்றும் நியுஜெர்ஸி நகரங்களில் குண்டு வைத்ததாக ஆப்கன் குடியேறியான அஹமது கான் மீது அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் 29 பேர் காயமடைந்தனர்.

கைது செய்யப்பட்ட அஹமது கான் ரஹமி, வெடிகுண்டு தயாரிப்பதற்கான சாதனங்களை இணையதளம் மூலம் வாங்கியிருப்பதாக வழக்கறிஞர் தரப்பு தெரிவிக்கிறது.

அவர் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் ரத்தம் தோய்ந்த ஒரு நோட்டுப்புத்தகம் இருந்ததாகவும், அதில், ஜிகாதி கொள்கைகள் தொடர்பாகவும், ஒசாமா பின்லேடன் மற்றும் பாஸ்டன் மாரத்தான் குண்டு தாக்குதல்தாரிகள் குறித்தும் குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நியுயார்க்கில் தீவிர பாதுகாப்பு

திங்கள்கிழமையன்று, அவர் கைது செய்யப்பட்டபோது போலீஸ் அதிகாரிகளைக் கொல்ல முயன்றதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2014-ம் ஆண்டு ரஹமியை கண்காணித்ததாகவும், ஆனால், தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் அவரிடம் எந்த சமிக்ஞையும் காணப்படவில்லை என்றும் மத்திய புலனாய்வுத்துறை (எஃப்.பி.ஐ) தெரிவித்திருந்தது. வீட்டில் சச்சரவு ஏற்பட்ட பிறகு, அவரது தந்தை தங்களை உஷார்படுத்தியதாகவும் அத்துறை தெரிவித்திருந்தது.