பிரான்சில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கியது

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான பிரசாரம் அதிகாரப்பூரமாக தொடங்கியுள்ளது. இதில் ஏழு பேர் களத்தில் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை PHILIPPE WOJAZER/AFP/Getty Images
Image caption அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபர் பதவியை முன்னாள் அதிபர் நிக்கோலா சார்க்கோசி முயன்று வருகிறார். நிக்கோலா சார்க்கோசி (கோப்புப்படம்)

இந்த போட்டியில், முன்னணியில் உள்ளவர் முன்னாள் பிரதமரான 71 வயதான அலன் ஜூப்பே.

2004ல், கட்சி நிதி ஊழல் தொடர்பாக தண்டிக்கப்பட்ட அவர் ஓர் ஆண்டுக்கு பொது பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டது.

முன்னாள் அதிபர் நிக்கோலா சர்கோஸி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்த போட்டியில் உள்ள ஒரே பெண் வேட்பாளர் நத்தலி கோசியுஸ்கோ மோரிசேத். இவர் சர்கோஸியின் முன்னாள் செய்தி தொடர்பாளர்.