ஊழல் குற்றச்சாட்டில் இராக்கின் நிதி அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வாக்களிப்பு

இராக்கின் நாடாளுமன்றம் நிதி அமைச்சர் ஹோஷ்யார் ஜெபாரியை ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதவிநீக்கம் செய்ய வாக்களித்துள்ளது.

படத்தின் காப்புரிமை ALI AL-SAADI/AFP/Getty Images
Image caption இராக்கின் நிதி அமைச்சர் ஹோஷ்யார் ஜெபாரி (கோப்புப்படம்)

கடந்த மாதம், இராக்கின் பாதுகாப்பு அமைச்சரும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக நீக்கப்பட்டார்.

இராக் பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்நோக்கும் இந்த நேரத்தில், இராக்கின் இரண்டு முக்கிய அமைச்சர் பதவிகளில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஹோஷ்யார் ஜெபாரி மூத்த இராக்கிய அரசியல்வாதி. அவர் முன்னதாக பல ஆண்டுகள் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றினார் .

சர்வதேச நாணய நிதியத்தோடு கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தை பெற முயன்ற உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியவர்.