மத்திய தரைக்கடலில் குடியேறிகளை சுமந்து சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 22 பேர் பலி

எகிப்து கடற்பகுதியில், மத்திய தரைக்கடலில் 600 சட்டவிரோத குடியேறிகளை சுமந்து சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில், குறைந்தது 22 பேர் இறந்து விட்டார்கள் என்றும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போய்விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை ARIS MESSINIS/AFP/Getty Images
Image caption மத்திய தரைக்கடலில் குடியேறிகளை சுமந்து சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 22 பேர் பலி என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மத்திய தரைக்கடலில் மீட்கப்பட்ட குடியேறிகள் (கோப்புப்படம்)

அதே நேரத்தில் 150 நபர்கள் காப்பாற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேடுதல் பணியில் உள்ள குழுவினர் உயிர் தப்பிய பலரை தேடி வருகின்றனர். அந்தப் படகு ரொசெட்டா துறைமுக நகரத்தில் கவிழ்ந்தது என்றும் இதுகுறித்த விவரங்கள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளனர்.