அமெரிக்காவில் கறுப்பினர் நபர் சுட்டுக் கொலை: தொடரும் போராட்டங்கள்

அமெரிக்காவின் சார்லோட் நகரில் ஒரு கறுப்பினர் நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டாவது இரவாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கறுப்பினர் நபர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தொடரும் போராட்டங்கள்

சார்லோட் நகர மையப் பகுதியில் குழுமியிருந்த சினமடைந்த கூட்டத்தினர் மீது கலவர தடுப்பு போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் போது, ஒருவர் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக, செவாய்க்கிழமை இரவன்று கீத் லாமொண்ட் ஸ்காட் என்பவரை போலீசார் கொன்றதால், வன்முறை மிகுந்த போராட்டங்கள் வெடித்துள்ளன.

கொல்லப்பட்ட கறுப்பின நபரான ஸ்காட் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், அதனை கீழே போடுமாறு தாங்கள் விடுத்த கட்டளைகளை அவர் அலட்சியம் செய்துவிட்டார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவரிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று ஸ்காட்டின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்