வெனிசுவெலா அதிபரை நீக்கும் வாக்கெடுப்பு இந்த ஆண்டு நடைபெறாது என தேர்தல் துறை அறிவிப்பு

வெனிசுவெலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவை பதவியிலிருந்து நீக்கலாமா வேண்டாமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பு இந்த ஆண்டு நடைபெறாது என அந்நாட்டு தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெனிசுவெலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ

அதிபரை பதவியிலிருந்து வெளியேற்றும் வாக்கெடுப்பிற்கு அழுத்தம் கொடுத்து வந்த எதிர்கட்சிக்கு இந்த முடிவு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற அக்டோபர் மாதத்தில், வாக்கெடுப்பிற்கு ஆதரவாக சுமார் 4 மில்லியன் வாக்காளர்களின் கையெழுத்துக்களை எதிர்கட்சி பெற்றால் அடுத்த அண்டின் தொடக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பு நடைபெறும் நேரம் மிக முக்கியமானது.

அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதிக்கு பிறகு அதிபர் மதுரோ தனது பதவியை விட்டு விலகும் பட்சத்தில் புதிய தேர்தல்கள் நடைபெறாது.

மாறாக, துணை அதிபர் ஆட்சியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்