ஹெக்மத்தியார் குழுவுடன் ஆப்கன் அரசு அமைதி ஒப்பந்தம்

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய தீவிரவாதக் குழுவோடு ஆப்கன் அரசு ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் அந்தக் குழுவின் தலைவர் குல்புதின் ஹெக்மத்தியார் ஒப்பந்தம் கையெழுத்தான போது அங்கு இல்லை.

படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images
Image caption ஆப்கான் அரசாங்கம் தனது நாட்டின் இரண்டாவது பெரிய தீவிரவாதக் குழுவோடு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தீவிரவாதக் குழுவின் தலைவர் குல்புதின் ஹெக்மத்தியார் (கோப்புப்படம்)

அவருக்கு பதிலாக, அவரது பிரதிநிதிகள் மற்றும் ஆப்கான் அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் ஹெக்மத்தியாருக்கு வழக்கிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு முக்கிய இஸ்லாமியவாத போர்க்குழு தலைவர்.

இவர் பல கொடுமைகளை செய்ததாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதற்கு பதிலாக, ஹெக்மத்தியார், அரசியலமைப்பை ஏற்கவும் வன்முறையைக் கைவிடவும் ஒப்புக்கொண்டார்.

கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் அவர் காபூலில் பொது வெளியில் தோன்ற வழி அமைத்துக் கொடுக்கும் நோக்கம் கொண்டது.