கென்யா எல்லையில் காவல் நிலையம் மீது அல்-சபாப் தாக்குதல்

சோமாலியாவை சேர்ந்த இஸ்லாமியவாத போராளி குழு அல்-சபாப் கென்யாவின் எல்லையில் உள்ள ஒரு காவல் நிலையத்தை தாக்கியது.

படத்தின் காப்புரிமை CARL DE SOUZA/AFP/Getty Images
Image caption சோமாலியவை சேர்ந்த இஸ்லாமியவாத போராளி குழு அல்-சபாப், தொடர்ந்து கென்யாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. பணியில் ஈடுபட்டுள்ள கென்யாவின் பாதுகாப்பு அதிகாரிகள். (கோப்புப்படம்)

கென்ய அரசு இரண்டு போலிஸ் அதிகாரிகள் காணாமல் போயுள்ளனர் என்று கூறியுள்ளது. இதற்கிடையில் ஆறு போலிஸ் அதிகாரிகளை கொன்றுவிட்டதாக , அல்-சபாப் தெரிவித்துள்ளது

உள்ளூர் குடியிருப்புவாசிகள் பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல்தாரிகள் காவல் நிலையத்தை கைப்பற்றிய பின்னர் போலிசாரின் வாகனம் மற்றும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வெளியேறிதாக தெரிவித்தனர்.

அல் சபாப் தொடர்ந்து கென்யாவை தாக்கிவருகிறது. கென்யாவின் படைகள் பொதுவான எல்லையை பாதுகாக்க 2011ல் சோமாலியாவில் நுழைந்ததற்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என்று அல் சபாப் கூறுகிறது.